அவல் போண்டா செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
அவல் - ஒரு கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக)
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
சாட் மசாலா - ஒரு ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2/ லிட்டர்
செய்முறை:
 
அவல் போண்டா செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அவல் சேர்க்கவும். பின்பு அவற்றில் வேகவைத்த உருளை கிழங்கை சேர்த்து நன்றாக மசித்து விடவும். பின்பு நறுக்கிவைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.
பிறகு அவற்றில் 1/2 கப் கடலை மாவு, ஒரு ஸ்பூன் சாட் மசாலா, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். அதன் பிறகு சிறு சிறு உருண்டைகளாக செய்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து  கொள்ளவும்.
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் அவற்றில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சூடான சுவையான அவல் போண்டா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்