சுவையான மற்றும் சுலபமான மஷ்ரூம் புலாவ் செய்ய...!

Webdunia
தேவையானவை:
 
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
மஷ்ரூம் - 15
கேரட், பீன்ஸ் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
புதினா - சிறிது
பிரியாணி இலை, பட்டை - தேவையான அளவு
லவங்கம், ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை:
 
வெங்காயம், மஷ்ரூம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். அரிசியைக் கழுவி ஊற வைக்கவும். பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கியதும் புதினா இலை சேர்த்து மஷ்ரூம், கேரட், பீன்ஸ் சேர்க்கவும். காய்களைச் சிறிது நேரம் வதக்கி, பின் அரிசி சேர்த்து 2 நிமிடங்கள்  வதக்கவும். இதில் உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு கொதிக்க விடவும். பின் சிறுதீயில் மூடி வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் மேலே தேவையான  அளவு கரம் மசாலாத்தூள் தூவி மூடி விடவும். சுவையான மஷ்ரூம் புலாவ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்