சுவை மிகுந்த கொத்தவரங்காய் பருப்பு உசிலி செய்ய !!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:31 IST)
தேவையான பொருட்கள்:

கொத்தவரங்காய் - 300 கிராம்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

ஊற வைத்து அரைக்கவேண்டிய பொருட்கள்:

துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் பொடி-1/2 டீஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து



செய்முறை:

ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்துக்கொள்ளுங்கள். கொத்தவரங்காயை குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு, மஞ்சள் சேர்த்து 2 விசில் வர வேகவைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கிடையே மிக்ஸியில் தண்ணீரை இறுத்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் மிகவும் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.

பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அரைத்த பருப்பை தட்டில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். காலை உணவுக்கு ஹெல்தியான ஓட்ஸ் ஆம்லெட் - உடல் எடை குறைப்பவர்களும் சாப்பிடலாம்.

பின் சூடு தணிந்ததும் அவற்றை உடைத்து உதிரிகளாக பிசைந்துகொள்ளுங்கள். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சேருங்கள். பின் பருப்பு சேர்த்து வதக்குங்கள். அதன் ஈரப்பதம் வற்றியதும் வேகவைத்த கொத்தவரங்காயை தண்ணீரை வடித்து கொட்டி கிளறுங்கள்.

உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். 2 நிமிடங்களுக்கு தட்டு போட்டு மூடி சிறு தீயில் வேக வையுங்கள். 2 நிமிடங்களுக்குப் பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்