ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும். பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பின்னர் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பை போட வேண்டும் .கொதித்து 2 நிமிடம் ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கி விடவும்.