செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து, நன்கு வதக்கவும்.அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரகர பதத்தில் அரைக்கவும். 6.தாளிக்க சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றவும்.