கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அத்திக்காயைப் போட்டு வதக்கவும். காய் வெந்ததும் அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துச் சேர்க்கவும்.
நன்கு வதக்கி, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கடலை மாவை கரைத்து இந்த கிரேவியில் ஊற்றவும். கிரேவி திக்காகவும், தனி சுவையுடனும் இருக்கும். சுவை மிகுந்த அத்திக்காய் கிரேவி தயார்.