செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு வறுத்துக்கொள்ளவும். நிறம்மாறும் வரை வறுத்து,எடுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, துவரம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் போது, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.
இந்த கலவையை வறுத்து வைத்துள்ள கொள்ளு பருப்புடன் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான மனமும், நற்குணமும் நிறைந்த கொள்ளு துவையல் தயார். இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்றது.