சுவையான அவல் வெஜ் புலாவ் செய்ய !!

Webdunia
புதன், 25 மே 2022 (14:22 IST)
தேவையான பொருட்கள்:

நறுக்கிய பீன்ஸ், கேரட் - கால் கப்
பட்டாணி, உருளைக்கிழங்கு - கால் கப்
வெங்காயம் - 1
கெட்டி அவல் - 2 கப்
தக்காளி - 2
தேங்காய் பால் - அரை கப்
கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் -அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



செய்முறை:

தக்காளியை அரைத்து வடிகட்டி கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணிநேரம் ஊறவிடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும். வித்தியாசமான சுவையில் அவல் வெஜ் புலாவ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்