சுவை மிகுந்த பரங்கிக்காய் அல்வா செய்ய !!

திங்கள், 23 மே 2022 (17:56 IST)
தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் - 2 கப் (துருவியது)
பால்  - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 1 கப்
உலர் திராட்சை - 8
ஏலக்காய் பொடி  - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
குங்குமப்பூ - சிறிதளவு



செய்முறை:

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துருவிய பரங்கிக்காய் சேர்த்து மூடி வைத்து, 2 விசில் விட்டுக் கொள்ள வேண்டும். விசில் வந்ததும், குக்கரை திறந்து, பரங்கிக்காயை ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், வேக வைத்த பரங்கிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, 5 நிமிடம் கழித்து அதில் 1 கப் பால் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின் அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் குங்குமப்பூ சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தீயை குறைத்து கலவை நன்கு கெட்டியாகி அல்வா போன்று வரும் வரை கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்து பிரட்டி இறக்கி குளிர வைக்க வேண்டும். அதற்குள் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவின் மீது தூவினால், சுவையான பரங்கிக்காய் அல்வா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்