எண்ணெய்யைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர், மோரில் உள்ள வாழைப்பூவை ஒட்டப்பிழிந்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்.
தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். பிறகு புளித்தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியானவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து, ஒரு கொதிவந்தவுடன் இறக்கிவிடவும். சுவையான வாழைப்பூ குழம்பு தயார்.