பன்னீர் டிக்கா செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
தந்தூரி மசாலாவுக்கு:
 
தயிர் - கால் கப்
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கடலை மாவு - தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சாட் மசாலா - அரை டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - கால் டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை (மேத்தி) - கால் டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு.
டிக்கா செய்வதற்கு:
 
பன்னீர் - 250 கிராம் (சதுர துண்டுகள்)
வெங்காயம், குடமிளகாய் - தலா ஒன்று (சதுரமாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று (சதுரமாக நறுக்கவும்)
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
 
 
தந்தூரி மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை நன்கு கலந்து தயார் செய்து வைக்கவும். இந்த மசாலாவை பன்னீர், வெங்காயம், தக்காளி,  குடமிளகாய் துண்டுகளில் தனித்தனியே தடவி 20 நிமிடம் ஊறவிடவும். இதை நீள கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி, ‘க்ரில்’  பண்ணவும்.
 
மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் சூடான தவாவில் எண்ணெய் விட்டு, பன்னீர், காய்கறி துண்டுகளை இரு புறமும் சிவக்க விட்டு எடுத்தால் பன்னீர் டிக்கா தயார். எலுமிச்சை ஜூஸை அதன் மீது லேசாக பிழிந்து பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்