வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் முந்திரி, வேர்க்கடலை, இஞ்சி துருவல், மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வர ஆரம்பித்தவுடன் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். தேவைப்பட்டால் இதனுடன் முந்திரியை வறுத்து சேர்த்துக்கொள்ளலாம். சுவையான தேங்காய் சாதம் தயார்.