கீரை, பொடிவகைகள், உப்பு இவற்றை பாத்திரத்தில் கலந்துகொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து கலக்கவும். கோதுமை மாவையும் சேர்க்கவும். சிறிது சிறிதாக நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துகு பிசைந்துகொள்ளவும். பின்னர் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு மேலும் 5 நிமிடங்கள் பிசைந்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும். காரசாரமான இந்த வெந்தயக்கீரை சப்பாத்திக்கு ரைத்தா, ஊறுகாய், வெண்ணெய், தேன் இவை பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும்.