செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் வைத்து, பின் நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டர் போட்டு காய்ந்ததும், பட்டையைப் போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் அனைத்து மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும். பிறகு அந்த கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் குடைமிளகாய், பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். காய்கறிகள் வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, பால் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி தூவினால், பன்னீர் பட்டர் மசாலா தயார்.