பயன்தரும் சில எளிய வீட்டு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்

Webdunia
இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்துக்கு பதிலாக சோயா மொச்சையை பயன்படுத்தி அரைத்து இட்லி செய்தால் அதிக  சத்தான இட்லி தயார்.
தலைமுடி பளபளப்புடன் இருக்க முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு முழு எலுமிச்சம்பழ ஜூஸை மட்டும் பிழிந்து தலைக்குத் தடவி பத்து நிமிடம் ஊறியபின் ரெகுலராக உபயோகிக்கும் ஷாம்பு போட்டு குளித்தால், நம் தலைமுடியைப் பார்த்து  அடுத்தவர் தலை சீவலாம்.
 
உருளைக்கிழங்கு கறி செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தையும் சேர்த்து சமைத்தால் வீடே மணக்கும். எளிதில்  செரிக்கும்.
 
சீயக்காய் அரைக்கும்போது வேப்பிலையையும் கடுக்காயையும் போட்டு அரைத்து தலைகுளிக்க உபயோகித்தால் பேன்  தொல்லை இருக்காது.
 
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளைச் செடியின் பூவைப் பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால்,  நோயின் தொந்தரவு குறையும்.
 
எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது 3 ஸ்பூன் ஓமத்தை இந்துப்பு, மிளகாய் பொடி, சர்க்கரை எல்லாம் சேர்த்து குலுக்கி  வெயிலில் காய வைத்து பிறகு சாப்பிடவும்.
 
செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும்.  இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும்.
 
பழைய சாதத்திலுள்ள நீரினால் தலைக்குக் குளியுங்கள். முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 
உஷ்ணத்தால் எப்படிப்பட்ட வயிற்றுவலிக்கு ஓர் எலுமிச்சம்பழத்தின் சாறைப் பிழிந்து இளநீரில் கலந்து கொடுத்தால்,  வயிற்றுவலி நின்றுவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்