வீட்டிற்கும், உடலுக்கும் தேவையான சில டிப்ஸ்....!

சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் வறுத்த பொடியை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயுத் தொல்லையா... எங்கே சென்று கேட்பீர்கள்.

 
புதினாக் கீரையை அரைத்துச் சட்னி செய்து சாப்பிட்டால் நல்ல பசி உண்டாக்கும். சிறுநீர் கழியும்பொழுது எரிச்சல் இல்லாமல்  போகும்.
 
அம்மன் பச்சரிசி இலையை நன்றாக நன்றாக அரைத்து கை கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
 
மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு பப்பாளிப் பழம் கைகண்ட மருந்து, வயிற்றில் இருக்கும் விஷக்கிருமிகளைக் கொல்லும்  சக்தி பப்பாளிக்கு உண்டு.
 
வெதுவெதுப்பான நீரில் ஓர் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் விலகும்.
 
கர்ப்பமான பெண்கள் அடிக்கடி டீ, காபி சாப்பிடக் கூடாது. அதற்குப் பதிலாக பால் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் நல்லது.  குழந்தைக்கும் நல்லது.
 
அருகம்புல் சாறை 100 மி.லி. அளவுக்குக் குடித்து வருபவர்களுக்கு ரத்தச் சோகை நீங்கி, உடல் பலம் பெறும்.
 
மஞ்சளையும், சுண்ணாம்பையும் சமமாக எடுத்து ஒன்றாகக் கலந்து இரவு படுக்கும், முன்பு காலில் உள்ள சேற்றுப் புண்களில்  தடவி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.
 
வல்லாரைக் கீரையை விழுதாக அரைத்துத் தயிரில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, வெள்ளைப்போக்கு உடனே  நிற்கும்.
 
குழந்தைகளுக்குப் பாலில் சர்ச்சரைக்குப் பதில் பனங்கற்கண்டைக் கலந்து கொடுத்தால் சளித் தொல்லை இருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்