6. சந்தனக் கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு உறங்குங்கள். பத்து நாட்கள் இதை தொடர்ந்து செய்தால் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். கண்சோர்வு, அயர்ச்சியினால் ஏற்படும் கருமையை சந்தனம் மற்றும் ஜாதிக்காயில் உள்ள குளுமை மாற்றி, கண்ணுக்கு பத்துணர்ச்சியைத் தரும். முகப் பருக்களுக்கும் இது சிறந்த நிவாரணி.
7. பூஜை மற்றும் பண்டிகைகளுக்கு உபயோகிக்கும் பூக்களை தூக்கி எறிந்துவிடாமல், காய வைத்து ஃபேஷியல் பவுடர் செய்யலாம். ரோஜா, செம்பருத்தி, மரிக்கொழுந்து, மல்லி, தாழம்பூ மடல்களை உதிர்த்துக் காயவையுங்கள். இதனுடன் காயவைத்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுத் தோல்களை சிறிதாக நறிக்கிச் சேர்க்கவும். பூக்கள், தோலுடன் முழுப்பயிறு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். 2 ஸ்பூன் பொடியுடன் அரை எலுமிச்சம் பழச் சாறு அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊறியபின் குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். முகம் பளிச்சன்று மென்மையாக இருப்பதை கண்கூடாகக் காணலாம்.