'சர்கார்' பேனர் கிழிப்பு: மன விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (09:07 IST)
விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் சர்கார் வெளியான திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைத்து அசத்தினர்

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் தீபாவளியை கொண்டாட தனது சொந்த ஊரான ஈராளச்சேரி என்ற கிராமத்திற்கு சென்றார்.

அவர் சென்ற நேரத்தில் அந்த பகுதியில் வைத்திருந்த 'சர்கார்' பேனரை ஒருசில மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் தான் சர்கார் பேனரை கிழித்ததாக ஒருசிலர் அவருடைய வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் மனவிரக்தி அடைந்த மணிகண்டன், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 7 பேர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்