தமிழர்களே! நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்: ராகுல் காந்தியின் தமிழ் டுவீட்

Webdunia
புதன், 23 மே 2018 (11:32 IST)
எந்த ஒரு போராட்டம் நடந்தாலும், வன்முறை நடந்தாலும் அதை அரசியலாக்குவது நம்மூர் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அந்த வகையில் நேற்று நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தை வைத்தும் மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை அரசியல் செய்ய தொடங்கிவிட்டன. 
 
நேற்று தூத்துகுடியில் போராட்டம் நடந்த போது எந்த அரசியல் தலைவர்களும் எட்டிப்பார்க்கவில்லை. நேற்றைய போராட்டத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டிருந்தால் துப்பாக்கி சூடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
 
ஆனால் நேற்றைய போராட்டத்திற்கு வராமல் இன்று பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் சொல்லவும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் தூத்துகுடியை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ்  சித்தாந்தத்திற்கு அடிபணிய  மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும்  தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன்  இருக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்