75 ஆயிரம் கன அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்திறப்பு: இரவில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திங்கள், 23 ஜூலை 2018 (22:15 IST)
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் மாலையில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் மேலும் 10ஆயிரம் கன அடி அதிகரித்து 50 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது அணையின் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் வேறு வழியின்றி மேட்டூர் அணையின் நீர்திறப்பு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 75,000 கனஅடியில் இருந்து 80,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 
 
இந்த நிலையில் இரவில் மேலும் அதிகமாக நீர் திறந்துவிடும் வாய்ப்பு இருப்பதாலும் இரவு நேரம் என்பதாலும் பொதுமக்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறும் மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் உடனடியாக தாழ்வான பகுதியில் இருப்பவர்களை பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்