பாலியல் தொல்லை: மோதிக்கொள்ளும் நடிகைகள்

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (15:14 IST)
பாலியல் தொல்லை சம்பவங்கள் எதுவும் சினிமாவில் நடக்கவில்லை என்ற ரகுல்பீரீத் சிங் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை மாதவி லதா.


சினிமா வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா சினிமா துறையிலும் இருக்கிறது. பல வருடங்களாக அது பற்றி நடிகைகள் பேசாமல் இருந்தனர். ஆனால், தற்போது துணிச்சலாக தங்களை படுக்கைக்கு அழைத்த சினிமா பிரபலங்கள் பற்றி துணிவாக பேசி வருகின்றனர்.
 
அண்மையில் நடிகை ராதிகா ஆப்தே கூட தன்னிடம் தென்னிந்திய நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தால் அறை வாங்கினார் என்று கூறியிருந்தார். இதே போல நடிகைகள் பலர் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் தொல்லை செய்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ரகுல்பீரீத் சிங் இந்த குற்றசாட்டுகளை மறுத்து, நான் 4 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன் படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படும் எந்த தவறும் இங்கு நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை மாதவி லதா பேசியிருப்பதாவது, சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நிலமை இருக்கிறது. ரகுல்பீரீத் சிங் பொய் பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்