1 1/2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு : ஆடிப்போன அமேசான் ஓனர்...

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:53 IST)
ஏ முதல் இசட் வரை எல்லா பொருட்களையும் விற்கும் உலகின் மிகப்பெரிய  ஆன்லைன் வர்த்தக நிறுவனம்தான் அனேசான். ஆப்பிளுக்கு அடுத்து உலகின் மதிப்பு  வாய்ந்த இரண்டாவது பெரு நிறுவனமாக உள்ளது.
இந்த நிறுவத்தின் தலைவர் ஜெ பெசோஸ் ஆவார். இந்நிறுவனத்திற்கு சமீபகாலமாக வர்த்தக சந்தை இறங்கு முகமாகவே உள்ளது.
 
இந்தவருடம் தான் உலகின் பணக்காரர்கள் வரிசையில் வாரன்பஃப்பெட் ,பிகேட்ஸ் போன்றோரை அடுத்தடுத்த இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு வந்தார்.
 
இந்நிலையில் கடந்த இரண்டு நாளில் மட்டும் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பில் 1 1/2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்நிறுவனம் கடந்த 1994 ஆம் ஆண்டில் ஜெப் தோற்றுவித்தார். உலகெங்கும் இந்நிறுவனத்திற்கு  ஐந்து லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
 
அமேசான் நிறுவனத்தை போலவே மற்ற ஐடி நிறுவனங்களும் பெரு இழப்பை சந்தித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்