விஜயகாந்த் நிகழ்ச்சிகள் திடீர் ரத்து

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (06:00 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி சார்பில் தமிழகம் முழுக்க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், திருச்சியில் மே 2 ஆம் தேதி மற்றும் மே 3 ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து நிகழச்சிகளும் ரத்து செய்ப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் ஏதும் வெளிப்படையாக கூறவில்லை. இதனால், திருச்சியில் உள்ள தேமுதிக தொண்டர்களும், வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி தலைவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
அடுத்த கட்டுரையில்