வாடகை வீடுகளில் வசிப்போரின் வலியை உணர்த்தும் "டூலெட்" ட்ரைலர்..!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (17:37 IST)
வாடகை வீடுகளில் குடியிருப்போரின் வலிகளை அவர்களின் இடத்தில் இருந்து உணர்த்தும் டூலெட் ட்ரைலர் பார்ப்போரின் மனதை உருகவைக்கிறது.


 
ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கத்தில் உருவான ’டூலெட்’ திரைப்படம், 65வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பில் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஓர் பெருமையை சேர்த்துள்ளது. 
 
பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வித்யாசமான படைப்பில் வெளிவந்து சாதனை படைத்தது.  இப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செழியன். படத்தின் கதைக்கு ஏற்றவாறு உணர்வுபூர்வமான அற்புதமாக காட்சிகளை வடிவமைத்த அவர், 2 ஆவண படங்களையும் இவர்  இயக்கியுள்ளார்.
 
இந்நிலையில் செழியன் இயக்கத்தில் இதுவரை எந்த ஒரு முன்னணி இயக்குனரும் சிந்தித்து கூட பார்க்காத வகையில் அற்புதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டூலெட்".  இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி பலரையும் உருகவைத்துள்ளது .



 
வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் குடும்பம் சந்திக்கும் இன்னல்களையும் செதுக்கி செதுக்கி உருவாக்கி பார்ப்போரை கண்ணீரில் கலங்கடிக்க வைத்துள்ளார் இயக்குனர் செழியன். இப்படம் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 32 விருதுகளையும், 84 பரிந்துரைகளையும் பெற்று மிகப்பெரும் சாதனையை படைத்துவருகிறது. மேலும் இப்படம் கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சாதாரண மனிதர்களின் வாழ்வை, உண்மையும் உணர்வையும் கலந்து பணக்கார வர்க்கத்திற்கு தாழ்மையுள்ளவர்களின் நிலைமையை எடுத்து சொல்லும் டூலெட் படத்திற்கும் ,  படக்குழுவினருக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்