ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.இந்நிலையில் படத்தில் ஒரு கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கயாடு லோஹர் அடுத்தடுத்து முன்னணிக் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.