கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

vinoth

திங்கள், 9 ஜூன் 2025 (10:31 IST)
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து இளம் ஹீரோக்களை வைத்து படங்களைத் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது சூர்யாவும் இணையவுள்ளார். சூர்யாவை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க கமல்ஹாசன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஏறகனவே கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் சமீபகாலப் படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த அடியை வாங்கி வருகின்றன.

ஒரு காலத்தில் ரஜினி, விஜய் மற்றும் அஜித்துக்குப் போட்டியாக இருந்த சூர்யா தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரதீப் ரங்கநாதனின் பட வசூலைக் கூட தொட முடியாத நிலைக்கு கீழிறங்கியுள்ளார். இதன் காரணமாக தற்போது அவர் பல திறமையான இயக்குனர்களோடு கூட்டணி அமைத்து வருகிறார். தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்