எது, இவன் நடிகனாகப் போறானா?... ஒரு நாளைக்கு நாலு வார்த்தைதான் பேசுவான் – சூர்யாவைக் கேலி செய்த சிவகுமார்!

vinoth

சனி, 19 ஏப்ரல் 2025 (16:08 IST)
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் அதில் சூர்யாவின் தந்தை சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது “சூர்யாவுக்கு 17 வயதாக இருக்கும் போது அவன் கலைத்துறையில் பெரிய ஆளாக வருவான் என்று ஒரு ஜோதிடர் சொன்னார். நான் இயக்குனர் அல்லது ஒளிப்பதிவாளர் போலவா? எனக் கேட்க அவரோ ‘முகத்தை வைத்து செய்யும் தொழில் என்றார். நான் ‘நடிகனா’ எனக் கேட்டதற்கு ‘அப்படிதான் தோன்றுகிறது’ என்றார். அதற்கு நான் ‘காலையில் இருந்து இரவு வரை ஒரு நாளில் மொத்தமே நான்கு வார்த்தைதான் பேசுவான். “ என்றேன். அதற்கு அந்த ஜோதிடர் “உங்களை விட நல்ல நடிகராக வருவார்” என்றார்.” எனப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்