இந்தி தெரியாததால் என்னைக் கிண்டல் செய்து சிரித்தார்கள் – யுவன் ஷங்கர் ராஜா ஆதங்கம்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (15:46 IST)
இசையமைப்பாளரும் பாடகருமான யுவன் ஷங்கர் ராஜா விமான நிலையத்தில் தனக்கு இந்தி தெரியாது என்று கிண்டல் செய்து சிரித்ததாகக் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் ’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ என்ற டீசர்ட் அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனை அடுத்து நடிகர் ஷிரிஷ், நடிகர் சாந்தனு உள்பட பலர் ’ஹிந்தி தெரியாது போடா’ மற்றும்’ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் கொண்ட டீசர்ட் அணிந்து இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் அந்த வைரல் ட்ரண்ட் குறித்து பேசியுள்ள யுவன் ‘அந்த விஷயம் இவ்வளவு பெரிய பரபரப்பை உண்டாக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால் அதில் இடம்பெற்றிருந்த கருத்தில் நான் உறுதியாக நிற்கிறேன். நிலையத்தில் அதிகாரிகள் எனக்கு இந்தி தெரியாது என சொன்னபோது சிரித்து கிண்டல் செய்தார்கள். நான் இந்தியை வெறுக்கவில்லை. ஆனால் என் மேல் திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்