யோகி பாபுவின் பொம்மைநாயகி படப்பிடிப்பு நிறைவு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:09 IST)
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் பொம்மைநாயகி படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் பொம்மைநாயகி என்ற படமும் உள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான ஷான் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்