நாளை நடக்க உள்ள கான்பூர் டெஸ்ட் போட்டியில் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சதம் அடிக்காதது குறித்து பேசியுள்ள அவர் நான் சதமடிக்கவில்லை என்பது எனக்கும் தெரியும். நான் 80, 90 என ரன்களில் அவுட் ஆகியுள்ளேன். ஆனால் அதை பற்றி கவலைப்படவில்லை. அணியின் ஸ்கோரை உயர்த்துவதிலேயே எனது கவனம் இருக்கும்.