யாஷிகா கார் விபத்து: தோழி பாவனியின் தங்கை கண்ணீர் பதிவு!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (15:05 IST)
நடிகை யாஷிகா நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கார் அதிவேகமாக ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சீட்பெல்ட் அணியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
 
யாஷிகாவிற்கும் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார்  விசாரணை செய்து அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இறந்த பாவனியின் தங்கை ஸ்ராவணி தனது இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், " பாவனி வள்ளிச்செட்டி இனி நம்ம கூட இல்லை. உண்மையிலே இதை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. எனக்கு தெரியும் நம்ம எல்லாருமே இந்த கஷ்டமான சூழலை கடந்து தான் ஆகவேண்டும். எல்லாருக்குமே ரொம்ப நன்றி. உங்களின் அக்கறை மற்றும் வேண்டுதல்களுக்கு என கூறி பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்