மகாபலிபுரம் அருகே பயங்கர கார் விபத்து: நடிகை யாஷிகா படுகாயம்!

ஞாயிறு, 25 ஜூலை 2021 (06:59 IST)
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நடிகை யாஷிகா ஆனந்த் மகாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
 
இதில் சம்பவ இடத்திலேயே வள்ளிச்செட்டி பவணி என்பவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இவர் யாஷிகா ஆனந்த் நெருங்கிய தோழி என கூறப்படுகிறது. இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் உள்பட மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்