யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான முன்னோட்டமும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தை யாஷ் அறிவிக்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. பல மொழி இயக்குனர்கள் யாஷுக்குக் கதை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில்தான் அடுத்து யாஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள யாஷ் அங்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனரான ஜே ஜே பெர்ரியை சந்தித்து, அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதனால் யாஷின் அடுத்த படத்தில் அவர் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.