குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்ப்பார்களா விஜய்யும் எடப்பாடியும்? நெட்டிசன்ஸ் கேள்வி!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (16:29 IST)
திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்து தமிழக அரசு. ஆனால் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளியுள்ள விஜய்யும் எடப்பாடியும் தங்கள் குடும்பத்தோடு முதல் நாள் முதல் காட்சியை அமர்ந்து பார்ப்பார்களா என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர் சமூகவலைதள நெட்டிசன்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்