ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (10:00 IST)
நடிகர் ரஜினிகாந்திற்கும், பாஜகவுக்கு இடையே எப்பொழுதும் நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஜிகாந்தை ஜனாதிபதியாக்க பாஜக பரிசீலித்து வருவதாக இந்தியா டுடே என்ற ஆங்கில பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.


 
 
தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து முக்கியமான தேசிய கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆலோசனையை இப்போதே தொடங்கிவிட்டன.
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து சந்தித்து அன்மையில் ஆலோசனை நடத்தினர். ஆளும் கட்சியான பாஜகவில் பலரும் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சி செய்து வருகின்றனர். அந்த கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்க காத்திருப்போர் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
 
புதிய ஜனாதிபதி பதவிக்கு பாஜக தலைவர்கள், எல்கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மும், நடிகர் அமிதாப்பச்சன் ஆகிறது பெயர்கள் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் பெயரை பாஜக ரகசியமாக வைத்துள்ளதாக இந்தியா டுடே பத்திரிக்கை தே நெக்ஸ்ட் ஃபர்ஸ்ட் சிட்டிசன் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர பாஜக பலமுறை முயற்சித்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்