நடிகர் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் தசாவதாரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்ததகவல் வெளியாகிறது.
பிரபல இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கூகுள் குட்டப்பா. இப்படத்தில் தர்ஷன்- லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
சென்னை திருப்போரிலலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் கூகுள் குட்டப்பா பட குழுவினருடம் கே.எஸ்.ரவிக்குமார் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் எனக்கு போன் செய்து, தசாவதாரம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆச்சா என 2 மணி நேரம் பேசினார். சில ஆண்டுகளாகவே என்னைப் பார்ப்பவர்கள் தசாவதாரம்- 2 ஆம் பாகம் எப்போது எனக் கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவராலும் எத்தனை கோடி கொடுத்தாலும் இனி தசாவதாரம் 2 படத்தை உருவாக்க முடியாது. அதனால் தசாவதாரம் 2 படத்திற்கு வாய்ப்பில்லை. கூகுள்குட்டப்பாவை தியேட்டர்களுக்குச் சென்று பாருங்கள். அப்படி பார்க்க இயலாதவர்கள், ஆஹா ஓடிடி தளத்தில் பாருங்கள் எனத் தெரிவித்தார்.