காவல்நிலையம் வரை சென்ற விஜய் – இதற்கும் காரணம் எஸ் ஏ சிதானா?

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (09:50 IST)
நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து வெளியேற்றும் படி இருவர் மீது காவல்நிலையத்தில் அளித்த புகாருக்குப் பின்னணியில் அவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. இதற்கு அவரது மனையும் விஜய்யின் அம்மா ஷோபாவுக்கு விரும்பமின்றி அக்கட்சியிலிருந்து விலகி விஜய்க்கு ஆதவளித்தார்.

இந்நிலையில் விஜய்யின் சார்பாக தனக்கு சொந்தமான விருகம்பாக்கம் வீட்டில் தங்கியிருக்கும் ரவி ராஜா மற்றும் குமார் ஆகிய இருவரையும் காலி செய்து தரும்படி புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மீதே விஜய் புகார் அளித்ததின் பின்னணியில் எஸ் ஏ சந்திரசேகர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரவி ராஜா மற்றும் குமார் இருவரும் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரால் நியமிக்கப்பட்டவர்கள். இப்போது எஸ் ஏ சி கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் அவருக்கு துணையாக இருவரும் செயல்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தியானதால்தான் விஜய் அவர்களை காலி செய்ய சொல்லி புகார் அளிக்கும் அளவுக்கு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்