கேஜிஎஃப் படத்தில் எனது கதாபாத்திரம் வலிமையானது – ரவினா டண்டன் பதில்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (09:43 IST)
கேஜிஎப் 2 படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் வலிமையானது என ரவினா டாண்டன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரவீணா டண்டன் இப்போது கே ஜி எஃப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஆளவந்தான் மற்றும் சாது ஆகிய படங்களில் நடித்த இவரை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் இதுவரை இவரது கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருந்த படக்குழு , இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர். படத்தில் அவர ராமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் இந்திய பிரதமராக நடிக்கிறாராம்.

இந்நிலையில் கேஜிஎப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியுள்ள ரவீனா ‘நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் சிக்கலானது. வலிமையானதும் கூட. கதாபாத்திரத்தின் போக்கை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் கணித்துவிடமுடியாது. இயக்குனர் எனக்குக் கதை சொன்னபோதே நான் எனக்குப் பிடித்துவிட்டது. முற்றிலுமாக என்னை ஆட்கொண்டுவிட்டது படம். படக்குழுவினரின் நிதானமான பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்