விஜய்க்கு ஜோடியாக தமன்னா... ரசிகர்கள் அதிருப்தி! முருகதாஸின் மாஸ்டர் பிளான்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (09:49 IST)
விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்தில் தமன்னா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் மற்றும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் மடோன்னா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. ஏனென்றால் தமன்னா இப்போது பெரிதாக மார்க்கெட் இல்லாத நடிகை. அதுமட்டுமில்லாமல் இருவரும் சேர்ந்து நடித்த சுறா திரைப்படம் அட்டர் பிளாப் என்பதால் செண்ட்டிமெண்டாக அப்படி நினைக்கின்றனர்.

ஆனால் படத்தின் பட்ஜெட்டை வெகுவாக சன் பிக்சர்ஸ் குறைத்துவிட்டதால் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்தால் கொடுத்த பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க முடியாது என நினைக்கும் முருகதாஸ் இப்படி மார்க்கெட் இல்லாத நடிகைகயான தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்