ரஜினி - கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன்?

Prasanth K

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (11:22 IST)

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நீண்ட காலம் கழித்து ஒன்றிணையும் படத்தை இயக்க தனக்கு வாய்ப்பு வந்ததா என்பது குறித்து ப்ரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார்.

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இணைந்து படம் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்ட நிலையில், இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

 

இதனால் இந்த படத்தை யார் இயக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இந்த படத்தை இயக்க ப்ரதீப் ரங்கநாதனிடம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ப்ரதீப் ரங்கநாதன் “ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையும் படத்தை நான் இயக்கவில்லை. தற்போது நான் நடிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறேன்” என கூறியுள்ளார்.

 

ஆனால் அதேசமயம் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு குறித்து அவரிடம் பேசப்பட்டதா என்பது குறித்து அவர் பதில் சொல்லவில்லை. இதனால் ரஜினி - கமல் படத்தின் பேச்சுவார்த்தை ப்ரதீப்பிடமும் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்