இதற்குக் காரணம் விஜய்தான் என சொல்லப்படுகிறது. அறிவிப்பை வெளியிட வேண்டாமென சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விஜய் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏஆர் முருகதாஸ் கூறிய கதையின் முதல் பாதி விஜய்க்கு பிடித்த இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி அவருக்கு திருப்தி இல்லை என்றும் அதனை சரிசெய்து கொண்டு வருமாறு ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் ஏஆர் முருகதாஸின் முழு கதையும் தனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
இந்நிலையில், விஜய் 65 படத்தில் அவருக்கு ஜொடியாக பத்து வருடங்களுக்கு முன் அவருடன் சுறா படத்தில் நடித்த தமன்னா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
தமன்னா பாகுபலி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.