இந்திக்கு செல்லும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி… இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

vinoth

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (13:28 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் கடைசியாக மோகன் லாலை வைத்து அவர் இயக்கிய ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் தனது அடுத்தப் படத்தைத் தொடங்குவதில் இடைவெளி எடுத்துக் கொண்டார்.

தற்போது அவர் இந்தியில் ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஹன்சல் மேத்தா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் மகன் வீர் ஹிரானி கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்