இந்திய சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படும் பேன் இந்தியா என்ற வகைமையை முதல் முதலில் உருவாக்கியதே ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம்தான். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.