அனுஷ்கா ஏன் ப்ரமோஷனில் கலந்துகொள்வதில்லை…. இதுதான் காரணமா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (13:29 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.


கடைசியாக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் அவர் பங்கேற்கவில்லை. அதற்குக் காரணம் படத்தில் அவரை கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் ஒல்லியாக காட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் அவர் இன்னும் உடல் எடை அதிகமாகிதான் காணப்படுகிறாராம். அதனால் இப்போது ப்ரமோஷன்களில் கலந்துகொண்டால் படத்துக்கு நெகட்டிவ்வாக அமையும் என்பதால் கலந்துகொள்வதில்லை என சொல்லப்படுகிறது.                       

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்