பன்முகத்திறன் கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் இரா.பார்த்திபன் அவதாரம் எடுப்பவர். இலக்கியம், கலை, படைப்பு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். தமிழ் சினிமாவின் எப்போதும் வித்தியாசம் என்றாலே இயக்குனர் பார்த்திபன் தான். தன்னுடைய அதிரடி வசனங்களால் அசத்துவார்.
தற்போது நடிகர் பார்த்திபன் ஜூன் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்கேரியா, ஸ்லோவேனியா நாடுகளில் பொறுக்கி கொண்டிருப்பேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் யார் வீட்டு திருமணத்திற்காவது சென்றால் அவர் பரிசை வாங்கிச் செல்வதில்லையாம். அவரே செய்து எடுத்து செல்வாராம். பொதுவாக நிகழ்ச்சிகளில் வித்தியாசமாக பேசும் அவர் ட்விட்டரிலும் அப்படியே தன்னை வெளிப்படுத்துகிறார். அதுவும் சில நேரங்களில் ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.