சன்னிலியோன் செத்தால் என்ன செய்வீர்கள்: கஸ்தூரியின் கிண்டலான கேள்வி

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (00:25 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தான் கடந்த நான்கு நாட்களாக இந்திய ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இருந்தது. ஒருசில ஊடகங்கள் தங்கள் கற்பனைகளை சேர்த்து ஸ்ரீதேவி குறித்த செய்திகளை வாரி வழங்கியது. மேலும் கடந்த மூன்று நாட்களாக எந்த சேனலை பார்த்தாலும் ஸ்ரீதேவியின் படங்கள், பாடல்கள், பேட்டிகள் தான் ஒளிப்பரப்பப்பட்டது

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, அனைத்து தொலைக்காட்சிகளும் ஸ்ரீதேவி நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒருவேளை நாளை நடிகை சன்னி லியோன் இறக்க நேரிட்டால் இந்த தொலைக்காட்சிகள் எதனை ஒளிபரப்புவார்கள் என்பதை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன் என்று டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சன்னிலியோன் கனடா நாட்டின் ஆபாச நடிகை என்பதும் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும் கவர்ச்சியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்