இந்நிலையில் சுற்றுலா விசாவில் அமீரகம் செல்பவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் உடலை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அமீரக குடியுரிமை உள்ள ஒருவர் உறுதியளித்து கையெழுத்து போட்டால் மட்டுமே உடலை இறந்தவரின் நாட்டிற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் கேரளாவை சேர்ந்த அஷ்ரப் தாமரசெரி(44) போனி கபூருக்கு உதவ முன்வந்துள்ளார். ஸ்ரீதேவியின் அதிகாரப்பூர்வ விண்ணப்பங்கள் அனைத்திலும் போனி கபூர் அல்ல அஷ்ரபின் பெயர் தான் உள்ளது.
அஷ்ரப் தாமாக முன்வந்து உதவி அனைத்து விண்ணப்பங்களிலும் கையெழுத்திட்டு உறுதி அளித்ததால் தான் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு செல்ல அமீக அதிகாரிகள் சம்மதித்தார்கள். நேற்று மட்டும் ஸ்ரீதேவியின் உடலோடு சேர்த்து 6 உடல்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்க உதவியுள்ளார் அஷ்ரப். நாடு விட்டு நாடு வந்து இறப்பவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதை சேவையாக செய்து வருகிறார் அஷ்ரப்.