திருமண நிகழ்விற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு அவர் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் மரணமடைந்தார். அவரது உடல் என்பார்மிங் செய்யப்பட்டு நேற்று இரவு 10 மணி அளவில் அவரின் உடல் தனி விமானம் மூலம் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின் அவரது உடல் அந்தேரியில் உள்ள செலிப்ரேஷன் விளையாடு மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு, பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகர், நடிகைகள் அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின், மாலை 2 மணி அளவில் அவரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 5 கி.மீ தூரமுள்ள இடத்திற்கு சுமார் 2 மணி நேரம் நடந்த ஊர்வலம் 4.30 மணியளவில் முடிவடைந்தது.