என்னை ஹீரோவாக்கியது ரசிகர்கள்...குக்வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா ....

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (23:00 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  தற்போது இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதைத்தனது ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிலையில் இதுகுறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: என் வாழ்ந்த்துவதற்கக வெளியூரில் இருந்து வந்திருக்கும் ரசிகர்கள் மீது நானும் லவ் வைத்திருக்கிறேன் என்பதற்காகவே இந்த மீட்டிங் எனத் தெருவித்துள்ளார்.

மேலும், ஜீரோவாக இருந்த என்னை ஹீரோவாக்கியது நீங்கள் தான்…இந்த அற்புதத்தருணத்தை என் குடும்பத்தினருடன் கொண்டாடுவதை விட ரசிகர்களுடன் கொண்டாடுவத் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்