பார்க்கவே பரிதாபமாக இருக்கும் சந்தானம் ! ஏன் தெரியுமா ?

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (14:15 IST)
பிரபல தனியார் சேனலில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்த சந்தானம், மன்மதன் படத்தில் சிம்புவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு சந்தானத்தின் மார்க்கெட் உச்சம்தான். அனைத்து நடிகர்களுடனும் நடித்து குறுகிய காலத்தில் முன்னணி காமெடியனாக உயர்ந்தார். 
 
அதன்பின்னர் தனக்கு ஜூனியர்களாக இருந்தவர்களே சினிமாவின் ஹீரோ அவதாரம் எடுத்ததைப் பார்த்து தானும் ஹீரோவாகி தில்லுக்கு துட்டு, படங்களில் நடித்து ரசிகர்களின் கனவத்தை ஈர்த்தார். இந்நிலையில் அவர் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்தை ரிலீஸ் செய்ய கடுமையான முயற்சிகளில் அவர் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் தனது ரசிகர் மன்ற தலைவரின் கால் டாக்ஸி சேவை தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் சந்தானத்தை எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். காரணம் சந்தானம் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்து ஒல்லியாகக் காணப்பட்டார். அதற்கு அவரே விளக்கமும் சொன்னார் : நான் நடித்து வரும் டகால்டி படத்துக்காக உடல் எடையை குறைத்துள்ளேன் என்று தெரிவித்தார். பின்னர் அவரது டகால்டி பட போஸ்டர்களை வெளியிட்டார், அது தேசிய அளவில்,டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கினர் அவரது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்